வேட்பாளர் தொகுதிக்கு வராவிட்டாலும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்போம் – திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் பேட்டி..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கிய மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தொகுதிக்கு வரவில்லை என்றாலும் தொண்டர்களாகிய நாங்கள் வாக்கு சேகரித்து அதிகப்படியான வாக்கு விதத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் அதற்கான பணியை நாளைய தினமே அனைத்து பகுதிகளிலும் தொடங்கி கிராம் கிராம்மாக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பார்கள் என மணிமாறன் பேட்டியளித்தார்.