Home செய்திகள் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்..இஸ்ரோ தலைவர் பேட்டி..

குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்..இஸ்ரோ தலைவர் பேட்டி..

by ஆசிரியர்

குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டும் செல்ல பணிகள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மதுரை விமான நிலையத்தில் பேட்டி.

ராமேஸ்வரம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் சோமநாத்  மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து  சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார்

*டிவிடி 1 பிராசஸ் குறித்த கேள்விக்கு*

டி.வி.டி  1ல் மூணு,நாலு பிரச்சனைகள் உள்ளது. டி.வி.டி ஒன்றில் வேகத்தை அதிகப்படுத்தும் போது பிரச்சனை ஏற்படுகிறது.

டி.வி.டி 1 அக்டோபர் 21 இல் நடக்கவிருக்கிறது. இது இதற்குப் பிறகு  DVD 2  dvd3 மிஷன் இரண்டு மூன்று தடவைக்கு மேல் சோதனை செய்யப்படும்.

*ஸ்பேஸ் ஷட்டில் குறித்த கேள்விக்கு*

நம்மளுடையது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம். இது இரண்டு முறை  சோதனை செய்யப்பட்டு விட்டது. ஒருமுறை கடலிலும்,ஒரு முறை விமான ஓடுதள பாதையிலும் சோதனை செய்யப்பட்டசெய்யப்பட்டது

அடுத்த இறுதி கட்ட சோதனை விண்வெளிக்கு அனுப்புவது தான்.
*ஆதித்யா குறித்த கேள்விக்கு*

ஜனவரியில் L.ஒன் சுற்றுப்பாதையை சென்றடையும். அதன் பிறகு அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்

*குலசேகரபட்டினத்தில் ஏவுகணை செலுத்தும் இடம் அமைப்பது குறித்த கேள்விக்கு.*
மிகப்பெரிய பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய லாபகரமாக அமையப்போகிறது.

ஹரிகோட்டாவில் சிறிய ராக்கெட்டுகள் இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது.

வருங்காலத்தில் அதேபோல குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டால் அது நேரடியாக விண்வெளிக்கு சென்றடையும். எஸ்.எல்.வி போன்ற சிறிய வகை ராக்கெட்களுக்கு இந்த குலசேகரப்பட்டினம் ஏவுகணை தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலம் கையகப்படுத்த பணி ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பு பணிகள் அமைக்கப்பட்டவுடன் இரண்டு வருடங்களில் ஏவுகணை தளம் கட்டி முடிக்கப்படும்.

*நூறாண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்கும் விண்கலம் குறித்த கேள்விக்கு*

அமெரிக்காவில் உள்ள  டார்க் மிஷின் போன்ற நாமளும்  செய்ய வேண்டும் அதனை சோதனை செய்ய வேண்டும். அந்த விண்கல் எங்கு வேண்டுமானாலும் விழும் அமெரிக்க ஆஸ்திரேலியா உட்பட எங்கு வேண்டுமானாலும் விண்கல் விழலலாம் இது நமக்கு உண்டான பிரச்சனை அல்ல உலகத்தில் எங்கு வேண்டுமானால் விழலாம். உலக மற்றும் அனைத்து தேசங்களும் இணைந்து  இதை கையாள வேண்டும். அதற்கு இந்தியாவிற்கு பலமான  விண்வெளி தொழில்நுட்பம் வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கார் மூலம் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com