Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும்… செல்லூர் ராஜு பேட்டி..

கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும்… செல்லூர் ராஜு பேட்டி..

by ஆசிரியர்

கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். கூட்டுறவு துறை பெயருக்கு தான் பெரிய துறை ஆனால் நிதி ஆதாரமில்லாத துறை எனவும் அமைச்சர் செல்லூர் ராஜீ மதுரையில் பேட்டி.

மதுரை பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் – டி.வி.எஸ்.நகர் – ஆதிய பகுதிகளை இணைப்பதற்காக 2000ம் ஆண்டு 33 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ள பழங்காநத்தம் மேம்பாலத்தினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

டி.வி.எஸ்.நகர் பகுதியில் குடியிருக்கும் பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதேச்சையாக விமான நிலையத்தில் சந்தித்த போது இந்த மேம்பாலத்தில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது என கோரிக்கை விடுத்ததையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ,

மேம்பாலத்தினை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க.ஆட்சியில் துவங்க பட்ட திட்டமானாலும் சரி, எந்த கட்சி ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமானாலும் சரி மக்கள் தேவையை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் நோக்கம்.

2000ம் ஆண்டு துவங்கப்பட்ட இன்னும் நிறைவடையாமல் உள்ள மதுரை பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் – திருப்பரங்குன்றம் – டி.வி.எஸ் நகர் மேம்பாலத்தினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பாலங்களை கட்ட திட்டமிடுவதற்கு முன்பாகவே தனியார் இடத்தினை கையகபடுத்திவிட்டு தான் திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது பாலம் கட்டும் திட்டங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும்.

மதுரையில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் நிலங்களை கையக படுத்தி தான் கட்டப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் மதுரையில் நேற்று பெய்த கன மழையால் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். கூட்டுறவு துறை பெயருக்கு தான் பெரிய துறை ஆனால் நிதி ஆதாரமில்லாத துறை என தெரிவித்தார்.

எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் செல்லூர் ராஜூவை விமான நிலையத்தில் சந்தித்து கூறியதையடுத்து டி.வி.எஸ் நகர் பாலத்தில் சமூக விரோத செயல்கள் அதிகமாகிறது ஆகவே பாலத்தினை கட்டி முடிக்க நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை வைத்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மற்றும் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!