Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் நிர் நிலைகள் ஆக்கிரமிப்பு …

நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் நிர் நிலைகள் ஆக்கிரமிப்பு …

by ஆசிரியர்

நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு செய்தார்.

 நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு கொடைரோடு ஆகிய பகுதிகள் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஓடை கண்மாய் ஆகியவற்றின் மூலம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. சிறுமலையில் மழைப்பொழிவு இருக்கும் போது இந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வராது அதிகரித்து காணப்படும். ஆனால் இப்பகுதியில் உள்ள நிர் வரத்து பாதை மற்றும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணிர் வரத்து இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப் பட்டது. இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகர் அளித்து வந்தனர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதும் மீண்டும் அதே இடத்தில் முளைக்கத் தொடங்கியதால் தண்ணீர் வருவ தில் சிக்கல் ஏற்பட்டது.மாவட்ட கலெக்டர் வினய் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சிறுமலையாறு நீர் தேக்கம். தலிஓடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் மேலும் கொடைரோட்டில் உள்ள அண்ணா சமுத்திரம் கண்மாயை நேரில் பார்வையிட்டு தண்ணீர் வரத்து குறித்து கேட்டறிந்தார் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார் மேலும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்

ஆய்வின் போது நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் செல்வராஜ் மலரவன் நிலக்கோட்டை வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் துணை வட்டாட்சியருக்குமணி வருவாய் ஆய்வாளர் செல்வி கிராம நிர்வாக அலுவலர் சுமதி அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com