Home செய்திகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: மண்டபத்தில் மீன்வளத்துறை ஆணையர் ஆய்வு..

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: மண்டபத்தில் மீன்வளத்துறை ஆணையர் ஆய்வு..

by ஆசிரியர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு மண்டபம் முகாம் கலோனியர் பங்களா அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் விழா ஆயத்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மீன்வளம், மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். மீனவர் சங்க மாநாட்டில் மீனவர்களை சந்தித்து  தமிழக முதல்வர்  கலந்துரையாட உள்ளார். இது தொடர்பாக அரங்கம் அமைக்கவும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி அறிவுரை வழங்கினார்.

இதைதொடர்ந்து மண்டபம் மற்றும் பாம்பன் குந்துகால் பகுதி மீன் இறங்கு தளத்தை பார்வையிட்டார்.  இவ்விரு பகுதி மீனவர்களை சந்தித்து கோரிக்கையில் குறித்து மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி கேட்டறிந்தார்.

மீனவர்களின் கோரிக்கைபடி மீன் இறங்கு தளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர்கள் காத்தவராயன் (டாப் கோபெட்), பிரபாவதி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர் ஸ்ரீதர்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி, ஜெயக்குமார், அப்துல்காதர் ஜெய்லானி உட்பட பலர் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com