Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் கொரோனோ சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு..

கீழக்கரையில் கொரோனோ சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு..

by ஆசிரியர்

தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் வருகை புரிந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வின் போது திமுக நகர் செயலாளர் பசீர் அகமது,துணைச்செயலாளர் கென்னடி, இளைஞரணி அமைப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, வட்டாட்சியர் முருகேசன், துணைவட்டாட்சியர் பழனிகுமார், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் கொரோனா தடுப்புகள் மற்றும் அரசு மருத்துவமனை சென்று அரசு மருத்துவர்களிடம் போதுமான வசதிகள் உள்ளதா, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக இல்லை குறைவாக உள்ளதா என மருத்துவர் ராஜேஸ்வரனிடம் கேட்டறிந்தனர்.அங்கு பணியாற்றி கொண்டிருந்த முன்களப்பணியாளர்கள் (செவிலியர்களிடம் ) பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டனர். மேலும் இதில் மாணவரணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன், மீரான், சுஐபு, பயாஸ், நைம் ஆகியோர் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com