Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பரமக்குடி பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ஆய்வு..

பரமக்குடி பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் மற்றும் வைசியர் வீதி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (12.05.2020) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: 3799 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 30 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும் 3564 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 205 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவும் சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் இதுவரை 15 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 5 நபர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் 3 நபர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் 6 நபர்கள் சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிமீறல் தொடர்பாக இதுவரை 3633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் 5648 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 445 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளபடி பிற மாநிலங்களில் பணிகளுக்குச் சென்று சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அழைத்து வரப்படும் அனைவரையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பொது தனிமைப்படுத்தும் மையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பி.இந்திரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேலு, காவல்துணை கண்காணிப்பாளர் ஆர்.சங்கர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!