Home செய்திகள் தமிழ்நாட்டின் கலாச்சாரம், அழகு,மொழி, உங்கள் வீடு போலவே உணர வைக்கும்; பிரதமர் மோடி புகழாரம்..

தமிழ்நாட்டின் கலாச்சாரம், அழகு,மொழி, உங்கள் வீடு போலவே உணர வைக்கும்; பிரதமர் மோடி புகழாரம்..

by Askar

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார்.பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர். வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும்.2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது. அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும்.தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி. விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன்.இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது.கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கரை விளையாட்டுகள், சுற்றுலா துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வி திட்டத்தில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைத்துள்ளோம். விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!