யாழ்ப்பாணத்தில் இலங்கை ரூ. 250 மில்லியன் செலவில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு தகவல் வர்த்தக மையம் அமைக்க இந்தியா, இலங்கை இடையே இன்று (21.02.2019) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே / அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், பிரதி அமைச்சர்களான மாலிக் சமரவிக்ர, நளின் பண்டார ஜயமஹா, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் இந்திர மல்வத்த, இலங்கை அரசு மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சக செயலாளர் கொடிகார முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இலங்கை அரசு மேற்கொள்ளும் மக்கள் நலன்சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசு வழங்கும் உதவிகளின் வரிசையில் இத்திட்டம் ஒன்று. இந்த வர்த்தக மையமானது வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் . இந்திய அரசு அபிவிருத்தி மற்றும் புனர் நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தை மேம்படுத்தும் முகமாக வட மாகாணத்தில் 46 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு நிதி உதவியில் இம்மாகாணத்தில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதியில் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ் கலாச்சார மையம், 27 பாட சாலை கட்டடங்கள், 3 ஆயிரம் மழை நீர் சேகரிப்பு தொகுதிகள், 600 வீடுகளை கொண்ட 25 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் நிதி பங்களிப்பில் இலங்கை முழுவதும் 70க்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்க வே நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசு இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியில் 560 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.