Home செய்திகள் தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்திய தேசத்தின் 77-வது சுதந்திர தின விழா..

தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்திய தேசத்தின் 77-வது சுதந்திர தின விழா..

by ஆசிரியர்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய தேசத்தின் 77-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தலைமை தாங்கினார். செவிலிய கண்காணிப்பாளர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், நமது முன்னோர்கள், தேசத் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் பல தியாகங்கள் செய்து போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை இன்று நாம் அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாமும் நமது பங்கிற்கு சுதந்திரத்திற்காக, நாட்டிற்காக ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பை வழங்க வேண்டும். அது பணி நேரத்தில் பணியினை சிறப்பாக செய்ய வேண்டும். சாதி, மத பேதமின்றி, சுயநலம் இல்லாமல், கடமை உணர்வுடனும், நாட்டுப் பற்றுடனும், சேவை மனப்பான்மையுடன், அனைவரிடமும் அன்பு காட்டி பணிபுரிய வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதனை அடுத்து, தேசியக் கொடிக்கு உயிர் கொடுத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் கொடிக்கு மரியாதை செலுத்தினர். மேலும் பொது மக்களுக்காக சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு முழு அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com