Home செய்திகள் கடையநல்லூர் பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்..

கடையநல்லூர் பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்..

by ஆசிரியர்

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் ஹரியானா வன்முறை மற்றும் ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் ஹரியானா வன்முறையை தடுக்க தவறிய மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இந்த தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நகரத் தலைவர் பி.ஏ. செய்யது மசூது தலைமை தாங்கினார். நகரத் துணைத் தலைவர்கள் ஆசிரியர் எ.கெ. முஸ்தபா, ஜே.கே. செய்யது இமாம், தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ ஹைதர் அலி, எஸ்டியூ மாநில துணைத் தலைவர் எம்.கே. முகம்மது மைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் என்.எஸ். அக்பர் அலி, ஏ‌.ஏ. முகம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஏ. அப்துல் மஜீத் ஆலிம் கிராஅத் ஓதினார். நகரச் செயலாளர் பி.பி.அயூப்கான் அனைவரையும் வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஏ.ஒய் முஹ்யித்தீன் ஹஜ்ரத், முஸ்லிம் யூத்லீக் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹபிபுல்லா, மாவட்ட துணை செயலாளர் ஏ.எம். முகம்மது பாரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தெரு முனைப் பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. அப்துல் வஹாப், புளியங்குடி நகரத் தலைவர் இ.மை அப்துல் ரகுமான், நகரச் செயலாளர் எம்.ஷேக் காதர் மைதீன், நகர பொருளாளர் கொ.இ. முஹம்மது அப்துல் காதர், கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூ.கே. முஹம்மது துராப்ஷா, நகர துணை செயலாளர் கே.எஸ்.ஜே.சேக், கே.எம்‌.காஜா மைதீன், எஸ்.டி.யு. மாவட்ட தலைவர் வி.எம். அயூப்கான், எம்.கே அப்துல் காதர், எஸ்.டி.யூ சேகனா, அண்ணாவி மஜீத், இந்தி மஜீத், கே.எம். அப்துல் ரகுமான், த.ம. அப்துல் சமது, மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பிரச்சார முடிவில் நகரப் பொருளாளர் கே.கே. திவான் மைதீன் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com