மஹாவீர் ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது…

இந்தியா முழுவதும் 29.03.2018 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் உட்பட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுர மாவட்ட போலீசார் 1)ஹரிகிருஷ்ணன் 46/18 த/பெ நாகநாதன்,கமலா நேரு நகர், எமனேஸ்வரம், 2)முத்துக்குமார் த/பெ ஆறுமுகம், கீழ பள்ளிவாசல் தெரு,பரமக்குடி உள்ளிட்ட 9 பேரை கைது செய்தும்,அவர்ககளிடமிருந்து 434 மது பாட்டில்கள் மற்றும் 1130/-பணமும் கைப்பற்றப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு தடை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்