பத்திரிக்கை ஒளிப்பதிவாளர் மறைவுக்கு உதவி கரம் நீட்டிய தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்(WJUT) – மனித நேயம்..

மூத்த ஒளிப்பதிவாளர் திரு.சாம்ராஜ் மறைவையொட்டி அவரின் ஈமச்சடங்கு செலவிற்காக, (WJUT) தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக, மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ்  நிதியுதவி வழங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சாம்ராஜ் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார், இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இயற்கை எய்தினார்.

மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த அவரது ஈமச்சடங்கு செலவிற்காக சிரமப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து, (WJUT) தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் அறிவுறுத்தலின் படி சென்னை மாவட்ட செயலாளரும் ராஜ் டிவி கேமராமேனுமான வஜ்ரவேல்  ஏற்பாட்டின் பேரில், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை M.M பாபு ஆகியோர், நேரிடையாக மறைந்த சாம்ராஜ்  இல்லம் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஈமச்சடங்கு செலவிற்காக ரூபாய் 11000 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளனர்.

தகவல் ஜெ. அஸ்கர், மாநில இணைச் செய்தி தொடர்பாளர். தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்.