Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் லதா கிளினிக் – குழந்தைகள் மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்..வளர்த்து விட்ட ஊரை எட்டி உதைத்த அவலம்.. கீழக்கரை மக்கள் உண்மையை உணர்வார்களா?? போலியை புறக்கணிப்பார்களா??

இராமநாதபுரம் லதா கிளினிக் – குழந்தைகள் மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்..வளர்த்து விட்ட ஊரை எட்டி உதைத்த அவலம்.. கீழக்கரை மக்கள் உண்மையை உணர்வார்களா?? போலியை புறக்கணிப்பார்களா??

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் உள்ள லதா கிளினிக் எனும் குழந்தைகள் மருத்துவமனை பல வருடங்களுக்கு முன்னர் சாதாரண மருத்துவமனையாக தொடங்கப்பட்டது, தற்பொழுது பெரிய மருத்துவமனையாக வளர்ந்து நிற்பதற்கு கீழக்கரை மக்களின் பங்கு மிக பெரியது என்றால் மிகையாகாது.

ஏனென்றால் கீழக்கரையில் அனைத்து வசதிமிக்க மருத்துவமனைகள் திறகப்பட்ட பொழுதும், இராமநாதபுரத்திலேயே சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்ற மாயையில் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை குடும்பத்தில் ஓருவராக நினைத்து முக்கியத்துவம் கொடுத்து வந்த மக்களுக்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு கீழக்கரை மக்கள் மீது மனிதாபிமானமற்ற செயலை காட்டியுள்ளார்கள்.

ஆம், இரண்டு தினங்களுக்கு முன்பு கீழக்கரை சாலை தெருவை சார்ந்த ஃப்ர்ரான் என்ற 8வயது சிறுவனுக்கு உடல் நல குறைவு காரணமாக மருத்துவரை சந்திக்க சென்ற பொழுது அங்கிருந்த மருத்துவரின் பணியாளர் ராஜன் என்பவர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல்’ “கீழக்கரை முஸ்லிம் மக்களுக்கு மருத்துவம் பார்க்க கூடாது என டாக்டர் உத்தரவிட்டுள்ளார், ஆகையால் உடனடியாக வெளியேறுங்கள், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வாருங்கள்” என எவ்வளவு கெஞ்சியும் கேளாமல் துரத்தி அனுப்பியுள்ளார்.

பின்னர் இந்த சமயத்திலும் மனிதாபிமானத்துடன் மருத்துவ பணிபுரியும் பரணிகுமார் எனும் மருத்துவர் தேவையான மருத்துவ உதவிகள் செய்து அனுப்பியுள்ளார். மருத்துவ சேவையை மகேசன் சேவையாக எண்ணி செயல்படும் மருத்துவமனைகளுக்கு மத்தியில் இது போன்ற சில மனிதாபிமானமற்ற மக்களால் அத்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!