Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாம்பன் கடல் பாலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி…

பாம்பன் கடல் பாலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி…

by ஆசிரியர்

புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு மூலம் பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட மனிதச் சங்கிலி அமைத்ததைக்காக  சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இராமேஸ்வரம், பாம்பன் சாலை பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச்சங்கிலி நிகழ்ச்சி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு மூலம் நீண்ட தூர மனிதச் சங்கிலி சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்நரேந்திரசிங் பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி காவல் பார்வையாளர் ஸ்ரீனிவாசலு பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரத்திற்க  சாலை வழியாக செல்ல பாம்பன் சாலை பாலம் மட்டுமே வழியாக உள்ளது.

இப்பாலமானது 2.345கி.மீ ராமேஸ்வரம் மார்க்கத்தில் 600 மீ நீளம், மண்டபம் மார்க்கத்தில் 900 மீ நீளம் பாலத்தின் இறங்கு தலங்களாக 5 கி.மீ நீளம் உள்ளது. பாம்பன் பாலமானது ஆசிய அளவில் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாம்பன் பாலத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வாக 3000-க்கும் மேற்பட்டோர்  பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச்சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இம்மனித சங்கிலியில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மீனவ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இம்மனித சங்கிலியில் பங்கேற்ற அனைவரும் தேர்தல் தொடர்பான தகவல்களை 1950 என்ற  கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இளைஞர்கள், எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிப்போம். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நீக்க முற்பட வேண்டும். ஜனநாயகம் தழைக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உட்பட எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்தியவாறு அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மனித சங்கிலியில் பங்கேற்ற அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கூறியதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி மாவட்ட நிர்வாகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் வாக்குப்பதிவு எட்டுதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் செயல்பாடு குறித்து விளக்கமளித்தல், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட நோக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆசிய அளவில் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற பாம்பன் பாலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் மக்கள் அனைவரும் அச்சமின்றி எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்திய கடலோர காவல்படை (மண்டபம்) கமாண்டர் வெங்கடேஷ், இந்திய கப்பற்படை துணை கமாண்டர் சிமோத்  கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் குருநாதன், தேர்தல் செலவின பார்வையாளர்கள்ஷ்யாம்குமார், ஓம் பிரகாஷ் படேல், அமித்குப்தா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com