விண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….

கீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து தற்பொழுது அடிப்படை ஆலோசனைக் கட்டணம் கீழக்கரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூபாய்.150 ஆக உயர்ந்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தெரு மக்களை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், கடந்த காலங்களில் ஓவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு விதமாக ஆலோசனைக் கட்டணங்களை பெற்று வந்த நிலையில் திடீரென ஓரே மாதிரியான கட்டணம் உயரத்தி நிர்ணயம் செய்து இருப்பது, யதார்த்தமாக நடந்த செயலா? அல்லது குறிப்பிட்ட சில மருத்துவர்களின் வற்புறுத்தலால் இந்த கட்டண ஏற்றமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுகிறது. இது போன்ற முறையற்ற ஆலோசனைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த போவது யார்? எப்படி என்பது எல்லோர் மனதிலும் விடை தெரியாத ஒரு கேள்விக்குறதான்…

ஏன்:-

இதுபோன்ற அவல நிலைக்கு முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை மீது முழுமையான நம்பிக்கை இல்லாதுதான். இலவச மருத்துவம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ள சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகளப் பெற கடைநிலை ஊழியர் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை புரையோடிக் கிடக்கும் கையூட்டு பிரச்சினை. இதை தவிர்க்க தனியார் மருத்துவமனையை நாடினால் பொதுமக்களின் இயலாமையை காசாக்கும் மோசடித்தனம்.

பல அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை அரசு சார்பில் உண்டாக்காமல் இருப்பது. அதன் விளைவு கோடி கணக்கான மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட இயந்நிரங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப் படாமல் பொதுமக்களின் வரிப்பணம் விரயம் ஆகும் வேதனையான விசயம். என்று அரசாங்கம் பொது மருத்துவமனை மக்களின் மருத்துவமனை என்ற நம்பிக்கையை உருவாக்குவார்கள்?. அவ்வாறு உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள் அரசு மருத்துவமனையை நோக்கி வருவார்கள். அந்த நிலை உருவாகும் பொழுது தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்யும் நிலைக்கு வருவார்கள். அப்படி ஒரு பொற்காலம் உருவாகுமா??

1 Comment

  1. பணம் சம்பாதிப்பதே பெரும்பான்மையான மருத்துவர்களின் குறிக்கோளாக உள்ளது.நோயாளிகளுக்கு நிரந்தர நிவாரணம் அளிப்பதை காட்டிலும் தற்காலிக தீர்வையே மக்களுக்கு அளிக்க பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புகிறார்கள் ஏனென்றால் பணம் ஈட்டுவதே முக்கிய நோக்கமாக உள்ளதை தற்போதய நிலைமை எடுத்து காட்டுகிறது…

Comments are closed.