மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு..

 

குறைந்த நீரில் விவசாயிகளின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40மூ அல்லது 50மூ மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20,000/-மதிப்பில் வழங்கப்படுகிறது. மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர் நடவு முறைகளில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ9,840/-மதிப்பீட்டிலும, கொய்யாவிற்கு ரூ.17,599/- மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.23,100/- மதிப்பீட்டிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12,000/-வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ரோஜாää மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16,000/-வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.

விவசாய பெருமக்கள் தங்களுக்குத் தேவையான விதைகள்ää நடவு செடிகளின் விவரங்களை ‘உழவன் செயலி” மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிரää விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படுமு; விபரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை இராமநாதபுரம் 9003631332, மண்டபம் 9443405365, திருப்புல்லாணி 9786751340, போகலூர் 9942673964ää நயினார்கோவில் 9842569664, பரமக்குடி 9789541143, கமுதி 9659246637, முதுகுளத்தூர் 9659584931, கடலாடி 9944080594ää ஆர்.எஸ்.மங்கலம் 7299462970, திருவாடானை 9442675926 அணுகி பெற்றுக்கொள்ளவும். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04567 230832, 230328

மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்தெரிவித்துள்ளார்.