
இராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக்காவலர் கொரோனாவுக்கு உயிரிழப்பு டிஐஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் அய்யனார் இவர் கொரோனாவிற்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துமனையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவர் உடல் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதையடுத்து இன்று சேத்தூர் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தலைமை காவலர் அய்யனாரின் திரு உருவப்படத்திற்கு டிஐஜி ராஜேந்திரன். விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். மற்றும் இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் மற்றும் சரக காவல்துறை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் அய்யனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்,
டிஐஜி ராஜேந்திரன் பேசும்பொழுது கொடூரமான கொரோனா நோயால் உயிரிழந்துள்ள அய்யனார். ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். மேலும் காவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.