ஒட்டன்சத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்தவர் மீது லாரி மோதி விபத்து..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த சிவமணி என்பவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், காயமடைந்த சிவமணி என்பவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

#Paid Promotion