நிலக்கோட்டையில் மாணவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி..

திண்டுக்கல் மாவட்டம, நிலக்கோட்டையில் நிலக்கோட்டை காவல் நிலையம்,, திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணி நிலக்கோட்டை மீனாட்சிபுரத்தில் தொடங்கி, துரைச்சாமிபுரம், நிலக்கோட்டை பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் தலைக்கவசம் அணிந்த படி வரிசையாக சென்றதால் பொதுமக்கள் பார்த்தனர். இதில் கல்லூரி செயலர் ஸ்ரீதர், கல்லூரி முதல்வர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.