Home செய்திகள் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி குறைபாடு-பொதுமக்கள் அவதி..

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி குறைபாடு-பொதுமக்கள் அவதி..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் மெயின்ரோட்டில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. முறையான கழிவு நீர் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டியும்,அடிப்படை வசதி குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தியும் இப்பகுதி கிராம மக்கள் BDO அலுவலகத்தில் 27.05.19 இன்று காலை 11 மணியளவில் திடீரென ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் யூனியன் பகுதியில் சாலை அமைத்த 1 வருடத்திலையே 30க்கு மேற்பட்ட இடங்களில் குண்டு குழியுமாக காட்சி தரும் அவலம். இப்பகுதி அடிப்படை வசதிகள் குறைபாடுகள் குறித்து சுமார் 1 மணி நேரம் அதிகாரிகளுடன் விவாதம் நடைபெற்றது. இரு தினங்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும், இந்த ஊராட்சியில் மக்களுக்கு செய்ய வேண்டிய 11 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசு அதிகாரிகளின் கடமை!!! அதையும் போராடியே பெற வேண்டிய அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் விரைந்து செய்யப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!