69
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோயம்புத்துரில் மாநில அளவில் நடத்திய துளிர் ஜந்தர் மந்தர் வினாடி – வினா போட்டியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ரம்யா மற்றும் அபிராமி, பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா சித்திக்கா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி தாளாளர் அக்பர் அலி, தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்தினர்
You must be logged in to post a comment.