கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கொரோனா சமயத்தில் களப்பணி ஆற்றிய ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களை கௌரவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் 75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து விபத்து காலங்களில் விரைவில் சம்பவ இடங்களுக்கு சென்று மனித உயிர்களைக் காக்கும் உன்னதமான செயல்களில் ஈடுபட்டு இருபத்தி நான்கு மணி நேரத்திலும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கவுரவிக்கும் வகையில் மற்றும் கொரோனா நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை தொடத் தயங்கும் நிலை இருந்தபோது அரசு விதிமுறைகளை சரியாக கடைபிடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அனைத்து மதத்தினரின் சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்கள் அசாருதீன் நசுருதீன் பிரவீன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் 15கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுதந்திர தின கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .