முகவை மாநகரில் இன்று (04/02/2019) மிகவும் மாறுபட்ட வகையில் தரமான பொருட்களும் சேவைகளும் கிடைக்கும் “The Halal Shoppee – Tours & Travels” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு தரமான, கலப்படமில்லாத அனைத்து பொருட்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல விதமான தரமான வாசனை திரவியம், குர்ஆன் மற்றும் ஹதீஸ் புத்தகங்கள்(இஸ்லாமிய புத்தகங்கள), செயற்கை பொருட்கள் கலப்படமில்லாத இயற்கையான ஆர்கானிக் சோப்பு வகைகள் மற்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள நோய் நிவாரணியான சுத்தமான பச்சை காட்டுத்தேன் பல எடைகளில் விற்பனைக்கு உள்ளது.
மேலும் இவ்வியாபார தளத்தின் ஓரு பகுதியாக அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ் மூலம் சிறந்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலிலுடன் ஹஜ் மற்றும் உம்ரா சேவையும் வழங்கப்படுகிறது. மேலும் சர்வதேச ஹலால் சுற்றுலா பயணங்கள், விமான டிக்கெட் , ரயில் டிக்கெட் மற்றும் விசா சேவைகளும் வழங்கப்படுகிறது. அதே போல் இங்கு வாசிப்பவர்களின் பசிக்கு தீனி போடும் வகையில் பல மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளது.
இத்தொழில் வெற்றியடைய கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
You must be logged in to post a comment.