இராமநாதபுரத்தில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டி..

இராமநாதபுரத்திற்கு வருகை தந்திருந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர்  கூறியதாவது, “தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை பாரபட்சமின்றி விடுவிக்க வலியுறுத்தி திருச்சியில் அக்டோபர் 7ம் தேதி சட்ட பாதுகாப்பு மாநாடு நடத்துகிறோம்.

கல்லூரி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும். சோபியா ஒரு பனங்காட்டு நரி. இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார். சோபியாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக அளிக்காவிட்டால் தமிழக மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டார்கள்ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது மனித உறவுகளை கொச்சைப் படுத்தும் விதமாக ஓரினச்சேர்க்கை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது .இதை மறுபரிசீலனை செய்து இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளாட்சி அதிகாரிகள் கமிஷன் ஏஜன்டாக செயல்பட்டு வருகின்றனர். சிபிஐ ,வருமான வரித்துறை சோதனை என்பது மிரட்டுவதாக உள்ளது. தமிழக அரசை உடனடியாக கலைக்கவேண்டும் நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் துரிதப்படுத்த வேண்டும் . தமிழகத்தில் உள்ளாட்சி கமிஷன் ஆட்சி நடந்து வருகிறது.அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக டி.ஜி.பி. ஆகியோரை கைது செய்வதுடன் தமிழக அரசு உடனடியாக கலைக்க வேண்டும்” என பேட்டி அளித்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.