Home செய்திகள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சோழவந்தான்  பகுதியில் கிராம சபை கூட்டங்கள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சோழவந்தான்  பகுதியில் கிராம சபை கூட்டங்கள்

by ஆசிரியர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் அருகே உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையத்தை  மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது முனையமாக மாற்றவும் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார் பற்றாளர் சுமதி ஏ பி ஓ அழகு மீனா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய செயல் திட்டம் உருவாக்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்றசெயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார்.விக்கிரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சிமன்றதலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கினார்.

ஊராட்சிமன்றசெயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். இதில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பானா மூப்பன்பட்டி கிராமத்தில் ஊராட்சிமன்றதலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற செயலாளர்பாண்டி அறிக்கைவாசித்தார். வாடிப்பட்டிஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் ஊராட்சி மன்ற செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கேபிள் ராஜாமுன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற செயலாளர் மனோபாரதி அறிக்கைவாசித்தார். இரும்பாடி ஊராட்சியில் ஈஸ்வரிபண்ணைசெல்வம் தலைமைதாங்கினார். ஊராட்சிசெயலாளர் காசிலிங்கம் அறிக்கைவாசித்தார். நாச்சிகுளம் ஊராட்சியில் தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்றசெயலாளர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் முனியாண்டி அறிக்கை வாசித்தார் கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராமசபை கூட்டத்தில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், யூனியன்பணியாளர், சமூக ஆர்வலர், அங்கன்வாடிபணியாளர், வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறையினர்,சுகாதாரத் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் காடுபட்டி மற்றும் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com