Home செய்திகள் கிராமக்சபை கூட்டத்தில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலுவானது: ராமநாதபுரம் ஆட்சியர் பேச்சு..

கிராமக்சபை கூட்டத்தில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலுவானது: ராமநாதபுரம் ஆட்சியர் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.16- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், சின்னாண்டிவலசை ஊராட்சி புதுக்கோயில் கிராமத்தில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். ஊராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து 

மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். ஆட்சியர் பேசுகையில், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து திர்மானங்களை நிறைவேற்றுவதே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும். கிராம சபை கூட்டத்திலும் ஊர் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் போக தேவையான பணிகளை தேர்வு செய்து தீர்மானம் மூலம் நிறைவேற்றி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கிராம சபையில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலுசேர்க்கக்கூடிய ஒன்றாகும். அது மட்டுமின்றி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிராம சபைக்கூட்டம் பயனுள்ளதாக அமையும். எனவே அனைவரும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும். கிராம பகுதிகளில் பெண் குழந்தைகள், பெண்களை பாதுகாக்க பாலர் சபை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் பெண்கள் உயர் கல்வி வரை படிப்பதை உறுதி செய்தல், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் தீமைகளை தடுத்தல், 18 வயதிற்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வதை தடுத்தல் பணிகள் இதன் மூலம் கண்காணிக்கப்படும். ஊராட்சி தலைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஊராட்சி மக்களுக்கு தேவையான சான்றுகள், திட்டங்களை செயல்படுத்த உரிய கட்டணங்களை ரொக்கமாக செலுத்தாமல் இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தி வருகிறது. இதை பொதுமக்கள் பின்பற்றி பயன்பெற வேண்டும். ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் பேருந்து நிழற்குடை, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பள்ளிக்கு தேவையான கழிப்பறை கட்டடங்கள், சாலைகள் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, மணி வண்ணன், வேளாண் உதவி இயக்குநர் அமர்லால், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com