Home செய்திகள் வேம்பாரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..

வேம்பாரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..

by ஆசிரியர்

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வேம்பாரில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திமுக மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தெற்கு வேம்பார், வட’கு வேம்பார், பச்சையாபுரம், முத்தையாபுரம், சூரன்குடி, ராயப்பர்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவம், வேலைவாய்ப்பு, பனை தொழில், கடல் தொழில் பாதுகாப்பு மற்றம் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து அதனை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். இங்கு மக்கள் தெரிவித்த அனைத்து குறைகளையும், கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றி தர துணை நிற்போம். இந்தியாவில் உள்ள கருப்பு பணம் எல்லாம் வெளிநாட்டில் உள்ளது. அதனை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வழங்கப்படும் என்று மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூறினார். ஆனால் இன்று வரை 15 ரூபாயாவது யாருடைய வங்கி கணக்கிலாவது வரவு செய்தார்களா-? இல்லை. மாறாக நள்ளிரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்து அனைவரது கையில் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என தெரிவித்து மக்களை வீதியில் நிறுத்தினார்கள். இது தான் மோடி ஆட்சியின் சாதனை. இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது விவசாயிகளு’கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி 2 ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார். இது தேர்தல் நேரத்து நாடகமாகும். ஆனால் கலைஞர் தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல கூட்டுறவு வங்கிகளில் இருந்த விவசாய பெருங்குடி மக்களின் விவசாய கடன் 7 ஆயிரம் கோடியை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். ஐந்தாவது முறையாக கலைஞர் பொறுப்பேற்ற போது விழா மேடையிலேய கோட்டையிலிருந்து கோப்புகளை கொண்டு வரச்செய்து கையெழுத்திட்டு விவசாயிகளுக்கு பாதுகாவலனாக திகழ்ந்தவர் கருணாநிதி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக விரும்பிய ஆட்சி அமைந்ததும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியிருக்க கூடிய மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்கிற முயற்சியில் திமுக உறுதியாக ஈடுபடும் . தமிழகத்தில் 21 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எடப்பாடி ஆட்சி நிலைத்து நிற்க வாய்ப்பில்லை. மோடியின் ஆசியில் தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் ஒரே கல்லில் இரு மாங்கய் அடிக்க போகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 105 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தியுள்ளோம். மக்களிடம் குறைகளை கேட்டுள்ளோம். மக்களிடம் குறைகளை கேட்கிற ஒரே கட்சி திமுக தான். எந்த நம்பிக்கேயாடு இங்கு வந்து பிரச்சனைகளை சொல்லி இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பொறுப்புக்கு வரும்போது முழுமையாக நிறைவேற்றி தருவோம் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com