சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…

காந்தி ஜெயந்தியையட்டி இராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனி நபர் கழிப்பறை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிப்பு, மகளிர் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், மகளிர் திட்ட அலுவலர் காந்திமதி, சிறப்பு தாசில்தார்( ஆதிதிராவிடர் நலன்) செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர்கள் கார்த்தி, செந்தில், ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.