Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அருகே உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் பங்கேற்பு..

இராமநாதபுரம் அருகே உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் பங்கேற்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.2 ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உள்ளாட்சி தின கிராம  சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று  பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மிக முக்கியம் வாய்ந்த இக்கிராம சபை கூட்டம் என்பதால் அனைவரும் கலந்து கொண்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதி பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குடிநீர் இணைப்பு வரும் வரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூரியூர் கிராமத்திற்கு பேருந்து நிறுத்தம், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிராம சாலைகளை சீரமைக்கவும், பொதுமக்கள் வசிக்கும் வீதிகளில் தேவையான இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை, வேளாண் துறைகள் மூலம் மக்களுக்கு தேவையான திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு வழங்கி வரும மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்  விடுபட்ட பயனாளிகளுக்கு மேல்முறையீடு மூலம் பெற்று தரப்படும். இவ்வாறு என்றார். வேளாண் துறை உணவு பாதுகாப்பு இயக்க திட்டம் மூலம் இருவருக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், வேளாண் துறை இணை இயக்குனர் சரஸ்வதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சந்தோசம், வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், உணவு பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் தமீம் ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையர்,  செந்தாமரை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com