கீழக்கரை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா களிமண்குண்டு குருப் களிமண்குண்டு கிராமத்தில் உள்ள புயல்காப்பக கலையரங்க மேடையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.நடராசன் தலைமையிலும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு அமிர்தலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

அதைத் தொடர்ந்து அரசின் திட்டங்கள் விரிவாக விளக்கி சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ரூபாய் 25,27,372  மதிப்புள்ள 4 டிராக்டர்களும்  18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும் 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும் 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 6 சலவைப் பெட்டிகளும், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 6 தையல் இயந்திரம் உள்பட 92 பயனாளிகளுக்கு ரூபாய் 53,66,859 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் இளங்கோவன் நன்றியுரை வழங்கினார். இம்முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார், வருவாய் ஆய்வாளர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், மீனவர்கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டி உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பஸ் போக்குவரத்து வசதி அதிகமில்லாத கிராமத்திற்கு மக்கள் குறை கேட்டு தீர்வு தரும் திட்டத்தை தந்த தமிழக அரசுக்கும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் பொது மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.