இராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் விழிப்புணர்வு திரைப்படம்

இராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு திரைப்பபடம் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென் கடற்கரை, மண்டபம் முகாம் அண்ணா குடியிருப்பு, பஜார் ஆகிய இடங்களில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் வாகனத்தில் பெரிய அளவிலான LED திரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமாக தேர்வு செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பட காட்சிகளாக டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் தமிழக அரசின் சாதனைகள் குறித்த வீடியோ படக்காட்சி காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.