Home செய்திகள் அரபி பாடத்தில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்ற காயல்பட்டணம் மாணவி..

அரபி பாடத்தில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்ற காயல்பட்டணம் மாணவி..

by ஆசிரியர்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு தரவரிசைப்பட்டியலில் (2015 – 2018 கல்வி ஆண்டு) காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவி   M.Y. தௌலத் ரிஸ்வானா (த.பெ. முஹம்மது யுசுப்). கணிதவியல் துறையில் பகுதி 1 அரபி பாடத்தில்  முதலிடம் பெற்று (Goldmedal) தங்கபதக்கம்  பெற்றார். தங்கப்பதக்கத்தினை பெறும் தகுதி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.. தங்க பதக்கதினை மாண்புமிகு தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித், (31.07.2018 செவ்வாய்கிழமை) அன்று நடைபெற்ற மனோன்மணிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தரும் மாண்புமிகு தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், இணை வேந்தரும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், சிறப்பு விருந்தினர் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தகைசால் பேராசிரியர், ஆய்வுப்புல முதன்மையர் மற்றும் மேனாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.பி. தியாகராஜன் DSC., மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் கி. பாஸ்கர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சே. சந்தோஷ் பாபு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற  மாணவிக்கு  கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான், செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் B.A (CS), துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செ.வாசுகி M.A., Ph.D., DGT. இயக்குநர் திருமதி முனைவர் மெர்ஸி ஹென்றி M.A., Ph.D பேராசிரியர்கள், மாணவியர் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தகவல்:-S.H.கிதுரு முஹைய்யதீன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!