Home செய்திகள் பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகை:கருப்பு பலூன் விட்டு மீனவர் காங் போராட்டம்

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகை:கருப்பு பலூன் விட்டு மீனவர் காங் போராட்டம்

by mohan

தமிழக மீனவர்களை மாற்றான் தாய் பிள்ளையாக கருதும் பிரதமரின் ராமேஸ்வரம் வருகையை கண்டித்துபாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் விடும் போராட்டம்இன்று நடந்தது. இது தொடர்பாக அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்ட பத்திரிகை அறிக்கை–2022ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் 264 மீனவர்கள், 2023ம் ஆண்டில் 35 தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றி 240 தமிழக மீனவர்களை கைது செய்தனர். கடந்த 2 வாரத்தில் தமிழக மீனவர் 40 பேரை கைது செய்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு 140 படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கி உள்ளன. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருகின்றன.இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை பல்வெறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை. தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடி மாற்றான் தாய் மனப்போக்கில் தான் மீனவர்கள் பிரச்னையை கையாள்கிறார்.எனவே, பிரதமர் மோடியின் மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் பாம்பன் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் இன்று (21.01.2024) காலை 10:45 மணியளவில் அன்னை இந்திரா காந்தி பாம்பன் சாலைப் பாலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மோடி திரும்பச் செல்ல வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி., 2 ஆம் கட்ட யாத்திரையை அசாம் மாநிலத்தில் மேற்கொண்டுள்ளார்.அசாம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் அவரை வரவேற்று வைத்துள்ள பேனர்கள், போஸ்டர்களை பாஜகவினர் கிழித்து சேதப்படுத்தி, யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற சில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.இப்போராட்டத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலர் ரவி, துணை தலைவர் ரோவன் தல்மேதா. பொதுச்செயலர் ஜவஹர், மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், கன்னியாகுமரி கவுன்சிலர் ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!