இராமநாதபுரத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா…வீடியோ..

இராமநாதபுரம் நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பேசுகையில், பிரதமரின் பெண் குழந்தை காப்போம் (BETI BACHAO) பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் (BETI PADAV) திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பெண் குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம் என்றார். கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை , பள்ளி முதல்வர் ராஜமுத்து, ஆலோசகர் சங்கரலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.