அரசு பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய கீழைநியூஸ் நிர்வாகம்..

தங்கச்சிமடம் அரசு மேல் நிலைப்பள்ளியில்  12ம் வகுப்பு படித்து வருபவர் அனிதா. இவருக்கு சிறு வயது முதலே கை கடிகாரம் மீது கொள்ளை ஆசை.  ஆனால் குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக அவரால் கைக்கடிகாரம் வாங்க  இயலவில்லை.

ஆனால் தன் ஆசையை சாதனையாக, பல் வேறு 500கும் மேற்பட்ட வெவ்வேறான கைகடிகாரங்களின் புகைப்படங்களை சேகரித்து சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை பாராட்டி கடந்த சுதந்திர தினத்தன்று WILL MEDALS RECORDS சாதனை அங்கீகாரம் வழங்கி கௌரவித்தது.  இந்நிலையில் அம்மாணவியின் ஆசையை WILL MEDALS நிறுவனர் கலைவாணி கிழைநியூஸ் நிர்வாகத்திடம் அம்மாணவியின் ஆசையை தெரிவித்தார்.

அம்மாணிவியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் கடந்த வாரம் அம்மாணவிக்கு WILL MEDALS நிறுவனம் மூலம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.