பாலக்கோடு அடுத்த திருமால்பாடி வள்ளுர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் சீர்வரிசை கொடுத்து கொண்டாடினர்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி மற்றும் வள்ளுர் ஆகிய கிராமங்களில் உள்ள ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் போர்டுகள் , கணினி,பேனா, பென்சில் . விளையாட்டுப் பொருட்கள், பள்ளிக்கு தேவையான நாற்காலிகள் , குடங்கள் உள்ளிட்ட சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள்.

ஊர் பொதுமக்கள் கூறியதாவது தற்போது அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருவதாலும் மாணவர்களின் வருகை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் அபாயம் உள்ளதாலும் அவ்வாறு ஏற்படட்டல் வெகு தொலைவில் சென்று மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அதனை தவிர்க்க வே பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்று ஊர்வலமாக சென்று பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.