பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு மருந்து வழங்கிய ஆசிரியர் ..

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. மருத்துவனையின் சேவையில் உதவிக்கரம் நீட்டும் வகையில் ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுள் கால உறுப்பினர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.

இதன்படி ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி கலை ஆசிரியரும், ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுட்கால உறுப்பினருமான சித்தார்கோட்டை எம்.முஹமது காசிம் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை மாவட்ட செயலாளர் எம் ராக்லாண்ட் மதுரத்திடம் வழங்கினார்.