Home செய்திகள் இந்திய கடலோரக் காவல்படை யின் தலைவர் கிருஷ்ணசாமி நடராஜன் பிறந்தநாள்.!

இந்திய கடலோரக் காவல்படை யின் தலைவர் கிருஷ்ணசாமி நடராஜன் பிறந்தநாள்.!

by Askar
இந்திய கடலோர காவல்படையின் 23 வது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த  கிருஷ்ணசாமி நடராஜன் என்பவர்  பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
 கிருஷ்ணசாமி நடராஜன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்திகள் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்திய கடற்கரை எல்லைகளைப் பலப்படுத்தியதில் நடராஜன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
30/12/2019 தேதி அன்று தனது  தனது 58 வது பிறந்தநாள் காண்கிறார். கிருஷ்ணசாமி நடராஜன் பிறந்த  நாளை முன்னிட்டு அதே துறையில் பணிபுரிந்து சேவையாற்றி வரும் முதுநிலைப் பொறியாளாரான மற்றொரு தமிழர்,
பி.முரளிதரன் பால்ராஜ்
(UTTAM SAHAYAK ENGINEER
INDIAN COAST GUARD
STATION MUNDRA)
என்பவர்
கிருஷ்ணசாமி நடராஜன் அவர்களைப் பற்றி சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பி.முரளிதரன் அவர்கள் கூறியதாவது,
ஆயுதங்களை வாங்குவது, உட்கட்டமைப்புகளை  மேம்படுத்துவது ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள கிருஷ்ணசாமி நடராஜன், கடலோர காவல்படைக்காக தனியே பயிற்சி அகாடமி ஒன்றையும் நிறுவியுள்ளார்.PRESIDENTTATRAKSHAK MEDAL, TATRAKSHAKMEDAL போன்ற உயரிய விருதுகளை கிருஷ்ணசாமி நடராஜன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடத்தல் காரர்களுக்கும் ஊடுருவல் காரர்களுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்வதால், நீண்ட கடற்பரப்பைக் கொண்ட நம் இந்தியத் திருநாடு கடல் வழியே மிக பலமான பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது என்பது மிகையாகாது.
எவரும் எந்நேரமும் அணுகக்கூடிய சேவை சிகரம்.
மொழி இன மத வேறுபாடின்றி அனைவரையும் அணைத்துச் செல்லும் பண்பாளர்..
கடைநிலை ஊழியர் வரை கண்ணாகக் கருதும் மனித நேய மாண்பாளர்..
நாடு போற்றும் நல்லவரின் பிறந்தநாளில்.. நானும் போற்றி வணங்கும் பேறுற்றமைக்கு நன்றியுடன்..
நல்ல தலைமைக்கு பாராட்டும் நல்வாழ்த்துகளும்..
வாழ்க பல்லாண்டு.
எனக்கூறினார்.
தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியர்கள் அனைவரும் தலைநிமிர்ந்து நிற்கும் அளவிற்கு செயல்படும் கிருஷ்ணசாமி நடராஜன் அவர்களுக்கு நமது கீழை நியூஸ் குழுமத்தின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!