குப்பை மேடு வியாபார ஸ்தலமாகியது…

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற சூழல் நிலவி வந்தது. பல முறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் எந்த பலனுமே இல்லாமலே இருந்து வந்தது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வண்ணம், அத்தெரு ஜமாத்தினர் அப்பகுதியை சுத்தம் செய்ததுடன், உடனடியாக மக்களுக்கு பயனளிக்கும் விதமாக குறைந்த விலை கடைகளை நிறுவினர். இப்பொழுது அந்த இடத்தின் தோற்றமே மாறி மக்கள் புழங்கும் இடமாக மாறியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..