திருச்சியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி….புகைப்படம் தொகுப்பு..

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. திருச்சி அரசு அருங்காட்சியக கூடுதல் பொறுப்பு காப்பாட்சியர் பெரியசாமி கண்காட்சியினை திறந்து வைத்தார்.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தார். மேலும் உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. லால்குடி விஜயகுமார், மதன், ரமேஷ் உள்ளிட்டோர் கண்காட்சியில் பங்கேற்றனர். 2018 சுதந்திர தினத்திலிருந்து துவங்கி 2019 காந்தி பிறந்த தினத்திற்குள் 150 கண்காட்சி நடத்த திட்டமிட்டு பள்ளி, கல்லூரிகள், நூலகங்களில் நடத்தி வருகிறார். இம் முயற்சியினை முறையான ஆவணங்களுடன் சாதனை புத்தகத்தில் பதிவிடவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்