Home செய்திகள்மாநில செய்திகள் கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..

கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..

by Askar

கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..

பலநூறு ஆண்டுகளாக இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்த உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி பள்ளிவாசலை பூஜைக்கு திறந்து விட்டு அநியாயத் தீர்ப்பு வழங்கிய வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ பாதுகாக்க வலியுறுத்தியும், இன்று 10.02.2024 சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.

முற்றுகை போராட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் அவைத் தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி கண்டன முழக்கங்களை எழுப்ப 500-க்கும் மேற்பட்ட மஜகவினர் உயர்நீதி மன்றத்தை முற்றுகையிட புறப்பட்ட போது காவல்துறை கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அன்வர் பாஷா, மனிதநேய தொழிற்சங்க மாநில தலைவர் ரஹிம் என்ற அன்வர், துணைச் செயலாளர் கண்டோன்மெண்ட் அப்துல் சமது, தகவல், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக் முகமது, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தென் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அபுபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதுரூதீன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யும், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காசிம், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் உள்ளிட்ட மாவட்ட, நகர கிளை நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நெல்சன்- சென்னை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!