இராமநாதபுரம் அருகே எரிவாயு குழாய் உடைப்பு.. அபாயமான சூழல் – வீடியோ பதிவு..

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு தெற்குகாட்டூரில் இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு நிரப்பு நிலையங்கள உள்ளன.  இங்கு நிரப்பப்படும் எரிவாயு,  குழாய்கள் மூலம் அனுப்ப பட்டு  மின் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் கெயில் (Gas Authority of India Ltd) நிறுவன குழாய்கள்,  சேதுராஜன் என்பவரின் தென்னந்தோப்பு பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு இருந்தது. எரிவாயு கொண்டு செல்லப்படும் குழாய் தரமில்லாததால் உடைந்து எரிவாயு பயங்கர சத்தத்துடன் வெளியேறி வருகிறது.  மேலும் இதன் சமீபத்தில்  தனியார் மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ளதால் பொதுமக்களிடம் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உண்டாகியுள்ளது.

மேலும் இவை கடந்த1990 ம் ஆண்டு புதைக்கப்பட்ட இரும்பு குழாய்கள் ஆகும். ஆகையால்  எரிவாயு குழாய் உறுதிதன்மை இல்லாமல் உடைந்து புகையுடன் எரிவாயு வெளியேறி வருகிறது.

மேலும்  தண்ணீருடன் எரிவாயும் சேர்ந்து வெளியே வருவதாக தகவல் படி சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதுவரை எரிவாயு கசிவு குறித்து எவ்வித தகவலும் முழுமையாக தெரியவரவில்லை. ஆய்வின் முடிவில் முழுமையான தகவல் தெரியவரும் என தெரிவித்தனர்.

மேலும் கடந்த மாதம் 26ந் தேதி திருப்புலாணி பகுதி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு குழாய் போடப்பட்டுள்ள இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் – தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி இங்கிருந்து துவங்க உள்ளது இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.