வத்தலகுண்டு சின்னுபட்டியில் பெயர் பலகை திறப்பு விழா…

அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் வத்தலக்குண்டு அருகே சின்னுப்பட்டியில் பெயர் பலகை திறப்புவிழா மற்றும் AMS மஹாலில் உறுப்பினர்கள் அறிமுக விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் ரா.பாலச்சந்திரன், தேசிய செயலாளர், அ.சே.புகழேந்தி, தேசிய துணை செயலாளர் கே.ஆர்.ராஜா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெ.அஸ்கர், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் கண்மணி ராஜா நன்றியுரை நிகழ்த்தினார்.

அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் மூலமாக, சமூக நலன்கள் சார்ந்த விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.