மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவசமாக 1000 தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி..

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவசமாக 1000 தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் குருசங்கர், மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல் துணை ஆணையர் அருண் பாலகோபாலன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

காவல் ஆணையர் அவர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் சாலை பாதுகாப்பு விதிகளை மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும், மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராகவும் மற்றும் தூய்மையான மாநகராகவும் மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

செய்தி:- கனகராஜ், மதுரை