மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.அருண் பாலகோபாலன்,IPS., முழு முயற்சியால் 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரண்டாவது நாளான இன்று (05/02/2019) மதுரை மாநகர் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் திருமதி.சுந்தரி அவர்கள் தலைமையில் ஆறு கண் மருத்துவ குழுவினர்கள் இணைந்து 400 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கண் சிகிச்சை முகாமை பார்வையிட்டு, வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற வாகன ஓட்டுனர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சுரேஷ், மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.