63
நார்வே நாட்டில் வேலை மோகத்தால் க ரூ ஒரு கோடியே 62லட்சம் பணம் செலுத்தி ஏமாறிய தமிழர்கள் 54 பேர் கொழும்பு நகரில் தவித்து வருகின்றனர்.
இராமநாதபுரம், சிவகங்கை , நாகபட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேருக்கு நார்வே நாட்டு இராணுவத்தில் வேலை, வாங்கித் தருவதாக கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி, நாகர் கோயிலைச் சேர்ந்த முனியசாமி ஆகியோர் 54 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ஒரு கோடியே 62 லட்சம் செலுத்தி இலங்கை சென்றனர். நார்வே நாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இவர்கள் ஆக.. 24ந்தேதி முதல் இலங்கை கொழும்பு நகரில் சாப்பாடு, தண்ணீர் இன்றி பரி தவித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் வந்து சேர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.