இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாக்காளர் சிறப்பு முகாமில்ஆள் மாறாட்டம் செய்து பணியில் இருந்த கல்லூரி மாணவர் மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் ஆய்வில் சிக்கினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்த வாக்காளர் சிறப்பு முகாம் 23, 24/02/2019 இல் பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,367 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.
இது தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேற்று (24/02/2019) ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த வாலிபர் மீது ஆட்சியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முகாம் மேற்பார்வையாளர் பரமக்குடி நகராட்சி உதவியாளர் சண்முகவேலிடம் ஆட்சியர் விசாரித்தார். விசாரணையில், கீழக்கரை தனியார் கல்லூரி விரிவுரையாளர் பரமக்குடி திருவள்ளுவர் நகர் காளி முருகன் வெளியே சென்றதும், அவருக்கு மாற்றாக அவரது உறவினர் கல்லூரி மாணவர் தினகரன்என்பவரை நியமித்து சென்றதாகவும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி தாசில்தார் பரமசிவம் பரமக்குடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன்படி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் தினகரன், தனியார் கல்லூரி விரிவுரையாளர் காளிமுருகன் 27, நகராட்சி உதவியாளர் சண்முகவேல் 39, ஆகியோரை ஆள்மாறாட்டம் வழக்கில் சார்பு ஆய்வாளர் ராமசுப்ரமணி கைது செய்தார்.
You must be logged in to post a comment.