சாயல்குடியில் உணவுத் திருவிழா..

இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சாயல்குடியில் உணவு திருவிழா நடைபெற்றது . ‘போஷான் அபியான் திட்டம் சார்பில் போஷான் பக்வாடா திருவிழா 15 நாள் நாள்கள் கொண்டாடப்படுகிறது. 9 வது நாளான இன்று சாயல்குடி சமுதாய கூடத்தில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் உமா முன்னிலை வகித்தார், போஷான் அபியான் திட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.மைதிலி வரவேற்றார், சிறப்பு அழைப்பாராக கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் க. நீரா.பொன்முத்து கலந்து கொண்டு நமது பாரம்பரிய உணவுகள், பழமையான மருத்துவம் குறித்து பேசினார்.

வட்டார திட்ட உதவியாளர் மு.வெள்ளைப்பாண்டியன் போஷான் அபியான் திட்டம் பற்றி பேசினார். கடலாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, சோளம், என நவதானிய சேர்த்து பல வகையான உணவுகள் செய்து பார்வைக்கு வைத்தனர். கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பராமரிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். மேற்பார்வையாளர்கள் பால்மணி, சரசு பங்கேற்றனர். டி.மாரியூர் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்.பிரேமாவதி ஏற்பாடு செய்து இருந்தார்.