மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகோடு நடந்துள்ளதாக மீனவ பெண்கள் குற்றசாட்டு. நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் முறைகேட்டிற்க்கு துனை போவதை கண்டித்து ஆறு மணி நேரமாக மீன்வளத்துறை அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள்கிழமை தேர்வு செய்ய தேவையான 7 பேரை தவிர ஏனைய மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்து மண்டபம் மீன்வளத்துறை அலுவலகத்தில் பட்டியல் ஒட்டப்பட்டது. இதையடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட மனுதாரர்கள் அனைவரும் மண்டபம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணிக்கு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பாளர்கள் உட்பட கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் மாலை 4 மணி வரையிலும் நீடித்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையின் வேண்டுகோளை ஏற்ற போராட்டகாரர்கள், தற்பொழுது கலைந்து செல்வதென்றும், தொடர்ந்து மீனவர் கூட்டுறவு மகளிர் சங்க தேர்தலை முறையாக நடத்தக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிடுவது, சாலை மறியல் போராட்டம் என தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து முற்றுகைப் போராட்டத்தை நிறைவு செய்து கலைந்து சென்றனர்.
You must be logged in to post a comment.